பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு |
தமிழ் சினிமாவிற்கு புதிது புதிதாக எங்கிருந்தோவெல்லாம் சிக்கல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் ஓடிடி தளங்களில் நேரடி வெளியீடு, மறுபக்கம் முன்னணி டிவிக்களில் நேரடி வெளியீடு என புதிய படங்களை தியேட்டர்கள் பக்கம் வரவிடாமல் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள்.
சரி, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் ஆகிய விடுமுறை நாட்களில் சில முக்கிய படங்களை வெளியிட்டு வசூலைப் பார்க்கலாம் என்றால் அதற்கும் புது சிக்கல் ஒன்று வருகிறது. இப்போதைக்கு தீபாவளிக்கு ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' படம் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தினத்தில் அஜித் நடித்துள்ள 'வலிமை' வந்தால் இரண்டு படங்களில் எதைப் பிடிப்பது என்ற போட்டி இருக்கும்.
அடுத்து கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் படங்களை வெளியிடலாம் என்றால் அப்போது தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி வரும் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா' படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.
அதற்கடுத்து 2022 பொங்கலுக்கு படங்களை வெளியிடலாம் என்று பார்த்தால் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிக்கும் 'ராதே ஷ்யாம்' படத்தை வெளியிட நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். அதற்கு ஒரு வாரம் முன்னதாகவே ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்தை வெளியிடலாமா என திட்டமிட்டு வருகிறார்களாம். அப்படி இந்த இரண்டு படங்களும் வெளிவந்தால் விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படம் பொங்கலுக்கு எப்படி வெளியாகும் என்று தெரியவில்லை.
சரி, 2022 தமிழ்ப் புத்தாண்டுக்கு சில பெரிய படங்களை வெளியிடலாம் என்று பார்த்தால் அன்றைய தினம் 'கேஜிஎப் 2' படம் வெளியாக உள்ளது. இப்படி அடுத்தடுத்து பண்டிகை நாட்களில் தமிழைத் தவிர வேற்று மொழிகளில் தயாராகியுள்ள 'பான்-இந்தியா' படங்கள் அவர்களது வெளியீட்டை திட்டமிட்டு முன்கூட்டியே அறிவித்து வருகிறார்கள்.
இவற்றோது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படம் அடுத்த வருடம் எப்போது வெளிவர உள்ளது என்பதும் கேள்வியை எழுப்புகிறது. இப்படி அடுத்த மொழி பிரம்மாண்ட வெளியீடுகளாலும் தமிழ் சினிமா புதிய சோதனையை சந்திக்கத் தயாராகி வருகிறது.