தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? |
சண்டக்கோழி 2 படத்தை அடுத்து தெலுங்கு நடிகர் ராம்பொத்னேனியை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரு படத்தை இயக்கி வருகிறார் லிங்குசாமி. இந்த படத்தில் கிருத்தி ஷெட்டி நாயகியாக நடிக்க, நதியா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்காக லிங்குசாமி வில்லன் நடிகர் தேடி வந்தபோது மாதவனிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படியொரு விசயமே நடக்கவில்லை என்று மாதவனே மறுத்தார். பின்னர் தனது புதிய படத்தில் ஆதி வில்லனாக நடிப்பதாக செய்தி வெளியிட்டார் லிங்குசாமி.
இந்நிலையில் தற்போது லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கான காட்பாதர் படத்தை சிரஞ்சீவியை வைத்து இயக்கி வரும் மோகன் ராஜாவும் அந்த படத்தில் முதலில் மலையாள நடிகர் பிஜூமேனனை வில்லனாக நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார். ஆனால் இப்போது ஒரு மெகா நடிகர் நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று மாதவனை காட்பாதரில் வில்லனாக நடிக்க வைக்க மோகன் ராஜா அவரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது சீக்கிரமே தெரிந்து விடும்.