இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! |
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்தவர் அர்ச்சனா. அதையடுத்து பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதன்பிறகு தனது யூடியூப் சேனலில் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்தநிலையில் அர்ச்சனாவுக்கு சமீபத்தில் மூளைக்கு அருகே சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. அதையடுத்து வீட்டிற்கு திரும்பிய அவர் இன்னும் சில மாதங்களில் எனது தொகுப்பாளர் பணியை தொடருவேன் என்றும் ஒரு வீடியோவில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது யு-டியூப்பில் நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் எப்போது மீண்டும் பணிக்கு திரும்புவீர்கள் என கேட்டார். அதற்கு பதிலளித்த அர்ச்சனா, ‛‛இப்போது கூட பணிக்கு வர ஆசை தான். ஆனால் எனது தொடையில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளன. மருத்துவர்கள் அங்கிருந்து தசைகளை எடுத்து என்னுடைய செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவை அடைக்கப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் நீண்டநேரம் நின்று கொண்டே பேச முடியாது. சில மாதங்கள் ஆகலாம். அடுத்தவாரம் டாக்டரை சந்திக்க உள்ளேன். அதன்பின் தான் தெரியும் என தெரிவித்துள்ளார்.