கிரிசில்டா குழந்தைக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும்: கோர்ட்டில் ரங்கராஜ் மனு | பிளாஷ்பேக்: தோல்வி பயத்தில் டைட்டிலை மாற்றிய டி.ஆர்.மகாலிங்கம் | சிக்கலில் ‛காந்தா' : தடை கோரி வழக்கு | கவுரி கிஷனுக்கு இதுவரை குரல் கொடுக்காத திரிஷா | 25வது நாளை கொண்டாடிய பைசன் | மகனை வாழ்த்தாத அப்பா : பேரனை உற்சாக படுத்தாத தாத்தா | மன்னிக்க முடியாதது : ஹேமமாலினி கோபம் | கொரியன் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் ராஷ்மிகா மந்தனா | பிக்பாஸ் மலையாளம் சீசன் 7 டைட்டில் வென்ற சீரியல் நடிகை அனுமோல் | நடிகையானதை தொடர்ந்து மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்ட விஸ்மாயா மோகன்லால் |

பேட்ட மற்றும் மாஸ்டர் படங்களின் மூலம் ரசிகர்களிடம் குறுகிய காலத்தில் பிரபலம் ஆனவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் சீரான இடைவெளிகளில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருபவர். கவர்ச்சியில் எந்த எல்லைக்கு செல்ல வேண்டுமோ அது வரை செல்லும் குணம் கொண்ட மாளவிகா மோகனன், சமீபத்தில் 80களின் பாரம்பரிய உடையாக இருந்த பாவாடை தாவணி அணிந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
ஆம், சமீபத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடிய மாளவிகா மோகனன் பாவாடை தாவணி அணிந்து அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறிப்பாக தனது சிறுவயது நண்பரும் தற்போதைய பாலிவுட் நடிகருமான விக்கி கவுஷல் மற்றும் சில நண்பர்களுடன் இந்த ஓணம் பண்டிகையை கொண்டாடிய மாளவிகா மோகனன் இந்த பாரம்பரிய பாவாடை தாவணி உடையை தனக்கு வடிவமைத்துக் கொடுத்த நடிகர் இந்திரஜித்தின் மனைவியான பூர்ணிமாவுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.




