ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
சிரிஷ், மிருதுளா, அருந்ததி நாயர், யோகிபாபு, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‛பிஸ்தா' படத்தை ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். படத்தை புவனேஸ்வரி சாம்ப சிவம் தயாரிக்க, 11:11 புரொடக்சன்ஸ் சார்பில், டாக்டர்.பிரபுதிலக் வெளியிடுகிறார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
படம் குறித்து பிரபுதிலக் கூறியதாவது: இந்த கொரோனா காலக்கட்டத்தில் மக்களின் டென்ஷனை, 100 சதவீதம் இப்படம் குறைக்கும். இந்த நேரத்தில் வயிறு குலுங்க மக்கள் சிரிக்க வேண்டும் என்று தான், ‛பாரீஸ் ஜெயராஜ்' படத்தை வெளியிட்டேன். தற்போது அதே கண்ணோட்டத்தில், மக்கள் அவரவர் கவலைகளை மறக்க, ‛பிஸ்தா' படத்தை வெளியிடுகிறோம். வித்தியாசமான கதைக்களத்தில் படம் உருவாகியுள்ளது. குடும்பத்தோடு வயிறு குலுங்கி சிரித்து பார்க்கலாம். தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் இப்படம் மக்களுக்கு நல்ல விருந்தாக ‛பிஸ்தா' அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.