குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. சுதந்திரப் போராட்ட காலத்து கதையாக உருவாகி வரும் இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு தற்போது உக்ரைன் நாட்டில் நடைபெற்று வருகிறது.
அக்டோபர் மாதம் 13ம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்கான பிரமோஷன்களை படக்குழு ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது. கடந்த வாரம் 'நட்பு' என்ற தலைப்பில் ஐந்து மொழிகளில் ஒரு பிரமோஷன் வீடியோவை வெளியிட்டார்கள்.
அடுத்து ஆர்ஆர்ஆர் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பொறுப்பை இன்று முதல் ஜுனியர் என்டிஆர் ஏற்றுக் கொள்கிறார். அதில் அவரது பட அனுபவங்களையும், சில தகவல்களையும் அவர் வெளியிட உள்ளார். அடுத்த சில நாட்களுக்கு இது தொடர உள்ளதாம். அதற்கடுத்து ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்கள் அதைச் செய்ய உள்ளார்களாம்.
'பாகுபலி' படத்திற்கு பல புதுவிதமான பிரமோஷன்களைச் செய்து அந்தப் படத்தை 1000 கோடி ரூபாய்க்கு அதிகமான வசூலைப் பெற்றார்கள். இப்போது 'ஆர்ஆர்ஆர' படத்திற்கு இன்னும் புதிதான பிரமோஷன்களைச் செய்து ரசிகர்களைக் கவர உள்ளார்கள். 'பாகுபலி' படத்தை விட 'ஆர்ஆர்ஆர்' படத்தை அதிக வசூல் ஈட்டச் செய்ய வேண்டும் என்பது படக்குழுவின் அதிகபட்ச ஆசை என்கிறார்கள்.