'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! |
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அதையடுத்து மிஷ்கின் தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். நடிகை ஆண்ட்ரியா முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதியும் அந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார்.பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
கார்த்திக் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு கார்த்திக் ராஜா இந்தப் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் டி.முருகானந்தம் தயாரித்துள்ளார். தற்போது பிசாசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் பாத் டப்பில் சிகரெட் பிடித்துக் கொண்டு ஒரு பெண் ஆடை இல்லாதவாறு உள்ளது. அநேகமாக இது ஆண்ட்ரியாவாக இருக்கலாம்.
மேலும் சிகப்பு தீமில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே படம் கண்டிப்பாக மிரட்டலாக இருக்கப்போகிறது என்பது உறுதியாகிவிட்டது. மேலும் போஸ்டரில் படம் இந்தாண்டு வெளியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இப்படத்திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.