அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
பாகுபலி படங்களுக்கு பின் இந்திய நடிகராக உருவாகி விட்ட பிரபாஸ் நடிப்பில் தற்போது 4 படங்கள் பான் இந்திய படங்களாகவே உருவாகி வருகின்றன. அந்தவகையில் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் இவர் நடித்துள்ள படம் ராதே ஷ்யாம். நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன் தான் இதன் படப்பிடிப்பு முழுதும் முடிந்தது. இதையடுத்து மற்ற பணிகள் துவங்கி உள்ளன. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின் காதல் கதையில் நடித்துள்ளார் பிரபாஸ்.
தமிழ், தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இப்படத்தை அடுத்தாண்டு பொங்கல், சங்கராந்தி பண்டியை முன்னிட்டு ஜன., 14ல் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின் பிரபாஸ் காதல் படத்தில் நடித்திருப்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.