ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
மணிரத்னம், ஜெயேந்திரா தயாரிப்பில் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள், நட்சத்திரங்கள் பங்கேற்க உருவாகியுள்ள ஆந்தாலஜி படம் நவரசா. இப்படத்தின் டிரைலர் இன்று(ஜூலை 27) யு டியூப் தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். ஓடிடி-க்களில் வெளியாகும் திரைப்படங்களும், வெப் சீரிஸ்களும் ஒரு பார்முலாவுக்குள், வட்டத்துக்குள் சிக்கியுள்ளதோ என்று யோசிக்கும் அளவிற்கு இந்த டிரைலரும் அமைந்துள்ளது.
இதற்கு முன்பு வெளிவந்தவற்றில் கூட சில பல பிரச்சினைகளைக் சுற்றிய கதைகளைத்தான் சொன்னார்கள். சுவாரசியமான கதைகளாக அவை இல்லை என்பது சாமானிய ரசிகர்களுக்கு குறையாக இருந்தது. அந்த வரிசையில்தான் இப்போது நவரசா டிரைலரும் இடம் பெற்றுள்ளது.
நவரசங்களின் அடிப்படையில் ஒன்பது உணர்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த 9 கதைகளில் எது ரசிகர்களிடம் சென்றடையப் போகிறது என்பது வெளியான பிறகு தெரிந்துவிடும்.
9 Stories, 9 Emotions and one incredible journey. #NavarasaOnNetflix#ManiSir @JayendrasPOV @Suriya_offl @VijaySethuOffl @Actor_Siddharth @thearvindswami @nambiarbejoy @menongautham @karthicknaren_M @karthiksubbaraj @priyadarshandir pic.twitter.com/pSnhi7MEyq
— Netflix India South (@Netflix_INSouth) July 27, 2021