நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா என அழைக்கப்படும் ஆதி.
அவர் தனக்குச் சொந்தமாக ஹிப்ஹாப் தமிழா என்ற பெயரில் யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தார். அதில் அவரது தனிப்பட்ட சில பாடல்கள், வீடியோக்கள் ஆகியவற்றை பதிவேற்றியிருந்தார். அந்த யூ டியூப் சேனலை யாரோ 'ஹேக்' செய்துள்ளார்கள். மேலும், அதிலிருந்த அவரது தனிப்பட்ட வீடியோக்களையும் டெலிட் செய்துவிட்டார்கள்.
ஹிப்ஹாப் தமிழா, தற்போது 'சிவகுமாரின் சபதம்' என்ற படத்திலும், 'அன்பறிவு' என்ற படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார். அவர் இயக்கி, இசையமைத்து, நாயகனாக நடிக்கும் 'சிவகுமாரின் சபதம்' என்ற படத்தின் இரண்டு பாடல்கள் கடந்த சில வாரங்களில் யு டியுபில் வெளியிட்டார்கள். அந்த இரண்டு பாடல்களுக்கு ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தார்கள். “என்னங்க பாட்டு போட்டிருக்கீங்க, இவ்வளவு இரைச்சலா” என்ற ரீதியிலான கமெண்ட்டுகள்தான் அதிகமாக இருந்தது.
அந்தப் பாடல்களைக் கேட்டு நொந்து போன யாரோ சில குறும்புக்கார ரசிகர்கள்தான் அவரது யு டியூப் சேனலை ஹேக் செய்திருப்பார்கள் என சமூக வலைத்தளங்களில் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.