லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மேக்னா ராஜ். அதன்பின் மலையாளம் கன்னடம் என நிறைய படங்களில் நடித்தவர், கன்னட நடிகரும் நடிகர் அர்ஜூனின் நெருங்கிய உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த வருடம் சிரஞ்சீவி சார்ஜா எதிர்பாராதவிதமாக மாரடைப்பால் காலமானார். அந்த சமயத்தில் கர்ப்பமாக இருந்த மேக்னா ராஜூக்கு கடந்த வருட இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது
தற்போது குழந்தை பிறந்து ஒன்பது மாதங்கள் ஆன நிலையில் மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளார் மேக்னாராஜ். இதுகுறித்து அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தான் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, மகன் பிறந்து ஒன்பது மாதம் ஆகிறது. அதை கொண்டாடும் விதமாக மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளேன் என்று கூறியுள்ளார். இதற்கு நஸ்ரியா உள்ளிட்ட அவரது நெருங்கிய தோழிகள் பலரும் வரவேற்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.