சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

நடிகர் ரஜினிகாந்துக்கு மொழி, நாட்டை கடந்து ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக ஜப்பான் நாட்டில் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம். முத்து படத்தில் தொடங்கியது ரஜினியின் ஜப்பான் அலை. அந்தப் படத்தில் இடம்பெற்ற, தில்லானா தில்லானா நீ தித்திக்கும் தேனா பாடலில், ரஜினியின் நடனத்தில் மயங்கிப் போன ஜப்பானியர்கள் ரஜினிக்கு டான்ஸ் மகாராஜா என்ற பட்டத்தை அளித்தனர்.
ரஜினியின் படங்கள் ஜப்பானில் தொடர்ந்து வெளியாகி பெரிய வெற்றி பெற்று வருகின்றன. ரஜினியின் ரசிகர்களான ஜப்பானியர்கள் தமிழகம் வந்து ரஜினியை சந்தித்த நிகழ்வும் நடந்தது. ரஜினியின் தர்பார் படம் வெளியான போது, ஒரு ஜப்பானிய ரசிகர் படத்தைப் பார்ப்பதற்காகவே ஜப்பானிலிருந்து சென்னை வந்தார். சரளமாக தமிழில் பேசி ஆச்சர்யம் அளித்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் கடந்த வாரம் ஜப்பானில் வெளியானது. ஜப்பானில் உள்ள தமிழர்களுடன், ரஜினியின் ஜப்பானிய ரசிகர்களும் தர்பார் வெளியானதை கொண்டாடி வருகின்றனர். படம் வெளியாகி ஒருவாரம் ஆன நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜப்பானின் கியோட்டோ, நகோயா, நிகிட்டா ஆகிய பகுதிகளில் தர்பார் கூடுதலாக திரையிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு படமொன்றுக்கு, வெளியான ஒரு வாரம் கழித்து திரையரங்குகளை அதிகரிப்பது சாதனை. அதனை ரஜினி சாதித்திருக்கிறார்.




