ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, ஜான் விஜய், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ள சாப்பட்டா பரம்பரைத் திரைப்படம் வெளியாகியுள்ளது. 1970-களின் மத்தியில் சென்னை சென்ட்ரலை ஒட்டியப் பகுதியின் முக்கியக் கலாச்சாரமாக இருந்த குத்துச் சண்டையை மையாக கொண்டு படம் உருவாக்கப்பட்டிருந்தது. படம் அனைத்து தரப்பினிடையேயும் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் படத்தைப் பாராட்டி வருகின்றனர்.
தற்போது சார்பட்டா படத்தைப் பார்த்துள்ள இயக்குனர் செல்வராகவன் படத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளார். "அருமையான படம் ரஞ்சித். படத்தின் ஒவ்வோரு காட்சியையும் ரசித்தேன். மற்றும் அன்பே ஆர்யா, ஒவ்வொரு பிரேமிலும் மிளிரிக் கொண்டே செல்கிறாய். உன்னை நினைத்து மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு இரண்டம உலகம் படத்தில் ஆர்யா நடித்திருந்தார்.
திரவுபதி இயக்குனர்
திரவுபதி இயக்குநர் மோகனின் டுவிட்டர் பதிவில், 'சார்பட்டா பரம்பரையின் மொத்த குழுவும் சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளனர். நான் கடவுள் படத்துக்குப் பிறகு ஆர்யாவின் மிகச் சிறந்த நடிப்பு. பசுபதி, ஜான் விஜய், டேன்சிங் ரோஸ் கதாபாத்திரங்கள் கவனிக்கத்தக்கவை. ரஞ்சித்தின் கடின உழைப்பு தெளிவாகத் தெரிகிறது. ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கம் உச்சம்' என்று குறிப்பிட்டுள்ளார்.