100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
தமிழில் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் மற்றும் பலர் நடித்து 2018ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'ராட்சசன்'. இப்படத்தை தெலுங்கில் ரமேஷ் வர்மா இயக்க, பெல்லம்கொன்டா சீனிவாஸ், அனுபமா பரமேஸ்வரன் நடிக்க ரீமேக் செய்து 'ராட்சசடு' என்ற பெயரில் 2019ம் ஆண்டு வெளியிட்டார்கள். அங்கும் படம் வெற்றியைப் பெற்றது.
தற்போது தெலுங்கில் இதன் இரண்டாம் பாகமான 'ராட்சசடு 2' படத்தை நேற்று அதன் இயக்குனர் ரமேஷ் வர்மா முதல் பார்வையுடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கப் போகிறார்.
இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க தமிழ் நடிகரான விஜய் சேதுபதியிடம் இயக்குனர் ரமேஷ் வர்மா பேசியுள்ளதாகத் தெரிகிறது. அவருக்கும் கதை பிடித்துவிட்டதாம். விஜய் சேதுபதி தற்போது 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறாராம். அதனால், இந்தப் படத்திற்கு எப்படி தேதிகளை ஒதுக்கித் தருவார் என்பதுதான் கேள்வியாக உள்ளதாம்.
தமிழிலும் 'ராட்சசன் 2' படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், அதற்கு முன்பே தெலுங்கில் அறிவிப்பு வெளியாகிவிட்டது.