எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' | 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இதயத்தை திருட வரும் நடிகை | பிளாஷ்பேக் : மருதகாசியை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய திருச்சி லோகநாதன் குரல் | பிளாஷ்பேக் : சிறை வாழ்க்கையையும் காமெடியாக்கிய என்.எஸ்.கிருஷ்ணன் |
சென்னை : தனது காருக்கு வரி விதிக்க தடைக்கேட்டு வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்யை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. வரி என்பது நன்கொடை அல்ல என்றும் சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்க்கையில் ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது எனவும் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். பாக்ஸ் ஆபிசிலும் நம்பர் 1 நடிகராக உள்ளார். அதோடு தற்போதைய நிலவரத்தில் ரூ.100 கோடி சம்பளம் வாங்குகிறாராம். இதனிடையே இங்கிலாந்தில் இருந்து கடந்த 2012ல் இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், விஜய்யின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்ததுடன், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். இந்த அபராதத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 2 வாரத்தில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
மேலும் நீதிபதி கூறுகையில், ‛சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி விலக்கு கோருவதை ஏற்க முடியாது. சினிமா நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். நிஜ வாழ்வில் ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது. வரி செலுத்துவது என்பது நன்கொடை கொடுப்பது போன்றது அல்ல, குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு. என கருத்து தெரிவித்தார்.
வரிகட்டுங்க_விஜய் டிரெண்டிங்
விஜய்க்கு சென்னை ஐகோர்ட் அபராதம் மற்றும் கண்டனம் தெரிவித்த விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. #actorvijay, #வரிகட்டுங்க_விஜய் என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின. இதில் பதிவான சில கருத்துக்கள்..
‛‛மாசம் 10 ஆயிரம் சம்பளம் வாங்குறவன் கூட ஒழுங்கா வரி காட்டுவான்... 100 கோடி வாங்கி என்ன பிரோயோஜனம்''. ‛‛கோடிகளில் சம்பளம் வாங்கும் உங்களால் சில லட்சங்களில் வரி கட்ட முடியாதா... ஊருக்கு தான் ஹீரோ, உள்ளுக்குள்ள ஜீரோ...''. ‛‛தான் நடிக்கும் படங்களின் ஆடியோ விழாக்களில் எல்லாம் அரசாங்கத்தை பற்றி ஏகத்திற்கும் விமர்சனம் செய்யும் இவர், முதலில் ஒழுங்காக வரி கட்டிவிட்டு பின்னர் மற்றவர்களை குறை சொல்லட்டும்''. ‛‛நாங்க ரோல்ஸ் ராய்ஸ் கார் தான் வச்சுருக்கோம், சொகுசு கார் அல்ல, அதனால் வரி கட்ட மாட்டோம்...''. ‛‛விஜய் முதலில் சரியான வக்கீலிடம் ஆலோசனை கேட்க வேண்டும். நாட்டுக்கு வரி செலுத்துவது ஒவ்வொருவரின் கடமை. அதை செய்யாவிட்டால் அபராதம், சிறை தண்டனை விக்கப்படும். பிறகு எதற்கு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் விஜய். ஒருவேளை இந்த விஷயம் கூட அவருக்கு தெரியாதோ...''. இப்படி பலரும் கருத்து பதிவிட்டு வருவதோடு வேடிக்கையான பல மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே விஜய்க்கு எதிராக டுவிட்டரில் நெகட்டிவ் கமெண்ட்கள் வைரலாக, அவரது ரசிகர்கள் வழக்கம் போல் விஜய் செய்தது எதுவும் தப்பில்லை என்கிற ரீதியில் #WeSupportThalapathyVijay என்ற ஹேஷ்டாக்கை டிரெண்ட் செய்தனர்.