இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? |
நெஞ்சில் துணிவிருந்தால் எனும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மெஹ்ரின் பிர்சடா. தனுஷின் பட்டாஸ் படத்தின் மூலம் பிரபலமானவர். கிருஷ்ணா காடி வீர பிரேம கதா என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அறிமுகமானார். பில்லவுரி எனும் பாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
பஞ்சாப்பை சேர்ந்த மெஹ்ரினுக்கும், தொழிலதிபர் பாவ்யா பிஷ்னாய் என்பவருக்கும் ஜெய்ப்பூரில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்றும், தனது நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் அறிவித்தார் மெஹ்ரின்.
மணமகன் பாவ்யா பிஷ்னாய் அரசியல் பின்னணி மற்றும் கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவர். அந்த குடும்பத்தினர் மெஹ்ரினை ஒரு அழகு மருமகளாக மட்டுமே வைத்துக் கொள்ள தீர்மானித்தாக தெரிகிறது. அவர் சினிமாவில் நடிக்க கூடாது. குடும்ப விழாக்கள் தவிர வேறு விழாக்களில் கலந்து கொள்ளக்கூடாது என்று பல கட்டுப்பாடுகளை விதித்ததால் மெஹ்ரின் நிச்சயதார்த்தத்தை முறித்ததாக கூறப்பட்டது.
இதனை மெஹ்ரின் தனடு டுவீட் மூலம் மறைமுகமாக உறுதிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் எழுதியிருப்பதாவது: உலகிலேயே மிகவும் ஆபத்தான பெண் என்பவள் யார் என்றால், எவள் ஒருத்தி உன் வாள் வேண்டாம் எனக் கூறுகிறாளோ, அவளை தற்காத்துக் கொள்ள கத்தி அவளிடமே உள்ளதாக அர்த்தம் என்று எழுதியிருக்கிறார்.