ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! |

தர்பார் படத்தில் கண்ணுல திமிரு பாடலில் ரஜினிகாந்த் நடனம் ஆடிக்கொண்டே எதிரிகளுடன் மோதும் சண்டை காட்சி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த சண்டை காட்சியை வடிவமைத்தவர்கள் தெலுங்கில் பிரபலமாக உள்ள இரட்டை சகோதரர்களான ராம்-லட்சுமண் மாஸ்டர்கள் தான். அதன் பின்னர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் சண்டைகாட்சிகளை வடிவமைத்து வந்தவர்கள், தற்போது அந்தப்படத்தில் இருந்து விலகியுள்ளனர்.
ஆனால் இயக்குனருடனோ, ஹீரோக்களுடனோ இவர்களுக்கு எந்தவித மனஸ்தாபமும் இல்லை. இந்தப்படத்தில் இவர்களது மேற்பார்வையில் சண்டைக்காட்சிகளை படமாக்கியபோது ராம்சரணுக்கு காயம் ஏற்பட்டு அதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக பல நாட்கள் நிறுத்தப்பட்டது. தற்போது நிலைமை சீராகி அதே சண்டைக்காட்சியை படமாக்க மொத்தமாக தேதிகள் ஒதுக்கும்படி அழைப்பு வந்தபோது, வேறு படத்திற்காக அவர்கள் ஒப்பந்தம் ஆகிவிட்டதால் தான் ஆர்ஆர்ஆர் படத்தில் இருந்து விலகியுள்ளனராம்.