அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கிட்டத்தட்ட 50 படங்களை நடித்துவிட்ட ஹன்ஷிகா, கடந்த சில வருடங்களாக மஹா என்கிற ஒரே படத்தில் நடித்தாலும் நடித்தார், அந்தப்படமும் இதுவரை வெளியானபாடில்லை.. வேறு எந்த புதிய படங்களும் அவர் கைவசம் இல்லை.. இந்த நிலையில் ஹன்சிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்கிறார். படத்திற்கு 'மை நேம் இஸ் ஸ்ருதி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
இந்தப்படத்தின் துவக்க விழா பூஜை நேற்று நடைபெற்றது. இந்தப்படத்தை ஸ்ரீனிவாஸ் ஓம்கர் என்பவர் இயக்குகிறார். இந்தப்படம் பற்றி அவர் கூறும்போது, “ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு பெண் இருப்பார் என சொல்வார்கள்.. ஆனால் ஒரு பெண் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு ஆண் எப்படி பொறுப்பாகிறான் என்பதை பற்றிய படமாக இது உருவாகிறது” என்கிறார்.