விஷ்ணு விஷாலுக்கு வில்லன் ஆன செல்வராகவன்! | அடுத்த மாதம் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு துவங்குகிறது | ராம்சரண் படத்திற்கு தயாரான சிவராஜ் குமார்! | நாகார்ஜூனா உடன் நடனமாடும் பூஜா ஹெக்டே! | பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | 'மார்கோ' படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பகூடாது : மத்திய தணிக்கை வாரியத்துக்கு கேரள அதிகாரி கடிதம் | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை | சிங்கமுத்து மீதான வழக்கு : வடிவேலு நீதிமன்றத்தில் ஆஜர் | பிளாஷ்பேக்: “இதயக்கனி” திரைப்படத்தின் இறுதிக்கட்ட சண்டைக் காட்சியின் பின்னணி |
நயன்தாரா முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடித்துக் கொண்டே, நாயகி மையப் படங்களிலும் நடிக்கிறார். தீபாவளிக்கு ரஜினியுடன் அவர் நடித்த அண்ணாத்த வெளியாகிறது. அதற்கு முன் அவர் கண் தெரியாதவராக நடித்துள்ள நெற்றிக்கண் வெளியாக உள்ளது. இது நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்கிறார்கள். இதுவொரு நாயகி மையப் படமாகும். தென்கொரிய படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் இது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தாவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்து வருகிறார். அத்துடன் ஒன்பது வருடங்களுக்கு முன் கோபிசந்துடன் அவர் நடித்து வெளிவராமல் இருக்கும் தெலுங்கு திரைப்படமும் இந்த வருடம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தமிழில் மேலுமொரு படத்தில் நயன்தாரா நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டா போட்டி படத்தின் மூலம் இயக்குனரானவர் யுவராஜ் தயாளன். வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி படங்களையும் இவர் தான் இயக்கினார். இவரது இயக்கத்தில் நயன்தாரா நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரலாம். இது முழுக்க முழுக்க காமெடி கதை என்கிறார்கள்.