ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
தொகுப்பாளினியாக இருந்து பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்தவர் பூஜா ராமச்சந்திரன். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் கவர்ச்சி போட்டோக்களை பகிர அஞ்சாதவர். கணவர் உடன் இருக்கும் ரொமான்டிக் போட்டோக்களையும் அவ்வப்போது பகிருவார். தற்போது சிறிய நீச்சல் குளம் ஒன்றில் பிகினி உடையில் கவர்ச்சியான போட்டோவை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவை கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர்.
அதோடு, ‛‛37 வயதில் இவ்வளவு சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக, உடல் ரீதியாக, வலிமையாக நான் உணர்ந்ததில்லை. என் வாழ்க்கையை, எண்ணங்களை நான் நேசிக்கிறேன். நல்லது, கெட்டது எல்லாவற்றையும் சமாளிக்க கற்றுக் கொண்டேன். இங்கும் எதுவும் நிரந்தரமில்லை. காலத்துக்கு ஏற்றபடி மாறிக் கொண்டே இருக்கும். என் வாழ்வில் நான் கற்ற வலி, பாடங்கள், காதல், மகிழ்ச்சி, ஏமாற்றங்கள், தோல்வி என எல்லாவற்றையும் கடந்து இந்த வாழ்க்கையை கொண்டாடுகிறேன்'' என பதிவிட்டுள்ளார் பூஜா.