பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியான படம் 'ஜகமே தந்திரம்'. படத்தைப் பார்த்த பலரும் இப்படி ஒரு மோசமான படத்தை கார்த்திக் சுப்பராஜ் எப்படி இயக்கினார், இப்படத்தில் நடிக்க தனுஷ் எப்படி சம்மதித்தார் என பல விமர்சனங்களை முன் வைத்தனர்.
பல லாஜிக் ஓட்டைகளுடன் இரண்டே முக்கால் மணி நேரம் பொறுமையாக உட்கார்ந்து பார்க்க முடியாத படமாக இருந்தது என விமர்சகர்களும், ரசிகர்களும் படத்தைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
ஓடிடி தளத்திற்கு படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் நல்ல விலைக்கு படத்தை விற்று அவர் தப்பித்துவிட்டார் என்றும், இப்படத்தின் தோல்வி கார்த்திக் சுப்பராஜ், தனுஷ் ஆகியோருக்குத் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
'இறுதிச் சுற்று, விக்ரம் வேதா, ஏலே, மண்டேலே' என பலராலும் பாராட்டப்பட்ட படங்களைக் கொடுத்த தயாரிப்பாளர் 'ஜகமே தந்திரம்' படத்தில் எப்படி தடுமாறினார் என்றும் கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் படத்தின் தோல்வியை ஏற்றுக் கொண்டது போல, 'ஜகமே தந்திரம்' படத்தில் தண்டவாளத்தில் ரயில் முன் தனுஷ் கார் நிற்கும் காட்சியின் புகைப்படத்தைப் பகிர்ந்து, “வெற்றி என்பது வெற்றி அல்ல, தோல்வி என்பது தோல்வி அல்ல,” எனக் குறிப்பிட்டுள்ளார்.