நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் கொஞ்சமே கொஞ்சம் நட்சத்திரங்கள் மட்டும் கோலோச்சும் குணச்சித்திர நடிகர்கள் பட்டியலில் முக்கியமானவர் நடிகர் கிஷோர்.. பொல்லாதவன், கபாலி ஒருபக்கம் வில்லனாக நடித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் ஹரிதாஸ், றெக்க போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் கிஷோர், ரசிகர்களிடம் தனி கவனம் பெற்றவர்.. இந்த்நிலையில் அவர் டைரக்சன் துறையில் அடியெடுத்து வைக்க இருக்கிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது.
தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிப்படமாக உருவாகவுள்ள இந்தப்படத்திற்கு 'ஆஹானி' என டைட்டில் வைத்துள்ளாராம் கிஷோர். இரண்டு மொழிகளிலும் இருந்து முக்கியமான நடிகர்கள் நடிக்கவுள்ள இந்தப்படத்தை அவரே சொந்தமாக தயாரிக்கவும் இருக்கிறாராம். படம் இயக்கும் வேலைகளில் இறங்கியதாலேயே, நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டு விட்டாராம் கிஷோர்.