லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'அய்யப்பனும் கோஷியும்'. பிரித்விராஜ், பிஜூமேனன் நடித்திருந்த இந்தப்படத்தை கதாசிரியரும் இயக்குனருமான சாச்சி இயக்கியிருந்தார். அந்த படம் வெளியாகி சில மாதங்களே ஆன நிலையில், கடந்த ஜூன் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார் சாச்சி. இது மலையாள திரையுலகிற்கு பேரதிர்ச்சியை தந்தது. அவர் மறைந்து ஒரு வருடம் ஆன நிலையில், அவரது மனைவி சிஜி, சாச்சியின் நினைவுகளை குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கும் முயற்சியில் சாச்சி இறங்கியிருந்தார் என்கிற தகவலை கூறியுள்ளார் சிஜி.
அய்யப்பனும் கோஷியும் படம் வெளியான பின்பு, அதை பார்த்துவிட்டு சாச்சியை தொடர்பு கொண்ட அஜித், அவரை ரொம்பவே பாராட்டினாராம். நாம் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் பணியாற்றுவோம், அதற்கான கதையை தயார் செய்யுங்கள் என்று சாச்சியிடம் கேட்டுக்கொண்டாராம் அஜித். தனுஷ்கோடியை மையப்படுத்திய கதை ஒன்றை, அஜித்தை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்க வேண்டும் என்பதை தனது கனவு படமாகவே நினைத்திருந்தாராம் சாச்சி. மாரடைப்புக்கு முன்னதாக, சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்ட சாச்சி, அதற்கு பின் வந்த நாட்களில், அஜித்தை நேரில் சந்தித்துப் பேசுவதற்கும் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் அந்த சந்திப்பு நிகழாமலேயே அவர் இந்த உலகை விட்டு சென்று விட்டார் என வருத்தத்துடன் கூறியுள்ளார் சாச்சியின் மனைவி சிஜி.