12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் | பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம் | 'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தான் நடிக்கப் போகும் புதிய படம் பற்றிய அறிவிப்பை 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ளார் தனுஷ். செப்டம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் அதில் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த வருடத்தில் அந்தப் புதிய படம் ஆரம்பமாகவில்லை.
அப்போது கார்த்திக் இயக்கிய 'பீட்சா, ஜிகர்தண்டா' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகி இருந்தது. தனுஷின் அந்த அறிவிப்புக்குப் பிறகுதான் அடுத்த இரண்டு மாதங்களில் 'இறைவி' படமும், அதற்கடுத்த வருடங்களில் 'மெர்க்குரி, பேட்ட' ஆகிய படங்களும் வெளிவந்தன.
2016ல் அறிவிக்கப்பட்ட கார்த்திக் சுப்பராஜ் - தனுஷ் படத்தை 2019ம் ஆண்டு வெளியான 'பேட்ட' படத்திற்குப் பிறகுதான் ஆரம்பித்தார்கள். அதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தன. முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். 2016ல் ஆரம்பமாக வேண்டிய படம் 2019ல் ஆரம்பமாகி முடிந்து, 2020 மே மாதம் தியேட்டர்களில் வெளிவர வேண்டியது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக படம் ஒரு வருடம் தள்ளி நேற்றுதான் ஓடிடி தளத்தில் வெளியானது.
படத்தை தியேட்டர்களில் வெளியிடாமல் தயாரிப்பாளர் ஓடிடி தளத்தில் வெளியிடுவது தனுஷுக்குப் பிடிக்காமல் போனது. அந்த வருத்தத்தில் படத்தின் பிரமோஷன்களில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நேற்று முன்தினம் டுவிட்டரில், “ஜகமே தந்திரம்' மற்றும் 'சுருளி' ஆகியவற்றிற்காக நன்றி கார்த்திக் சுப்பராஜ். மிக மோசமான கேங்ஸ்டர் சுருளி கதாபாத்திரத்தில் நடித்ததும், உங்களுடன் பணிபுரிந்த ஒவ்வொரு கணத்தையும் நேசித்தேன். மொத்த பாராட்டும் உங்களையும், உங்களது குழுவையும் சாரும்,” என நன்றி தெரிவித்திருந்தார்.
நேற்று வெளியான படம் மிகவும் மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் படத்தை கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இப்படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பைப் பற்றி எதுவும் பேசாமல் அடுத்த படத்திற்கு 'ஸ்கிப்' ஆகிவிட்டார் தனுஷ்.
தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளது பற்றி ,“நான் வியந்து பார்க்கும் இயக்குனர்களில் ஒருவரான சேகர் கம்முலாவுடன் இணைந்து பணி புரிய உள்ளதை மிகவும் உற்சாகமாக எதிர்பார்த்துள்ளேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.