விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! |
தமிழில் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த இந்தியன்-2 படம் தற்போது நீதிமன்றம் வழக்கு என சில பிரச்சினைகளில் சிக்கியிருக்கிறது. இந்தநேரத்தில் ராம்சரண் நடிப்பில் தான் இயக்கும் படத்தின் ஆரம்ப கட்ட பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார் ஷங்கர். அதோடு இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தை தயாரிக்கும் தில்ராஜூ, இப்படம் குறித்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதில்,ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பதை உறுதிப்படுத்திய அவர், இப்படம் தனது நிறுவனத்தின் 50ஆவது படம். அதனால் பான்-இந்தியா படமாக மெகா பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக அறிவித்துள்ளார். தில் ராஜூவின் இந்த அறிவிப்பு ஷங்கர் - ராம்சரண் இணையும் படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கயிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தில் ராம்சரண் ஒரு இளம் தலைவர் வேடத்தில் நடிப்பதாக இன்னொரு செய்தியும் டோலிவுட்டில் பரவிக்கொண்டிருக்கிறது.