‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

தென்னிந்திய நடிகைகளில் தான் அளிக்கும் பேட்டிகளில் மனதில் பட்டதை பளிச் பளிச் என்று சொல்லி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் தமிழ் கலாச்சாரம் எனக்கு பிடித்திருக்கிறது. அதனால் ஒரு தமிழரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார். இது சோசியல் மீடியாவில் வைரலானது.
இந்த நிலையில் இணையத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தபோது ஒரு ரசிகர், ஐபிஎல் போட்டி நடந்தபோது ராயல் சேலஞ்சர்ஸ் அணி தான் வெற்றி பெற்று கப்பை தட்டிச் செல்லும் என்று கூறி வந்தீர்கள். அப்படியென்றால் வீராட் கோலியைத்தானே உங்களுக்கு பிடிக்கும் என்று ஒரு ரசிகர் ராஷ்மிகாவிடத்தில் கேட்டார்.
அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, ‛‛எனக்கு பெங்களூரு அணி தான் பிடிக்கும். அதேசமயம், வீராட் கோலியை விட தோனி தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது திறமையும், மைதானத்தில் அவர் காட்டும் அணுகுமுறையும் தோனியிடத்தில் மிகவும் பிடித்த விசயங்கள்'' என்றார்.