ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
கடந்த மார்ச் மாதம் மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடித்த கள என்கிற திரைப்படம் வெளியானது. தனது வளர்ப்பு நாய் ஒன்றை கொன்றதற்காக, பழிவாங்க கிளம்பி வரும் கிராமத்தான் மற்றும் அந்த நாயை கொன்ற டொவினோ தாமஸ், இருவருக்கும் இடையே நடக்கும் பயங்கரமான சண்டை தான், இந்த படத்தின் கதை. பயங்கரமான என்று சொல்வதற்கு காரணம். இந்த படத்தின் சண்டைக்காட்சி இடைவேளைக்கு முன்னதாக ஆரம்பித்து. படத்தின் கிளைமாக்ஸ் வரை கிட்டத்தட்ட ஒன்றேகால் மணி நேரம் நீடிக்கும்.
அந்த வகையில் வசனங்கள் குறைவாக இடம்பெற்றதாலோ, என்னவோ இந்த படத்தை தற்போது மலையாளத்தில் மட்டுமல்லாமல், தமிழிலும் டப்பிங் செய்து இந்த வார இறுதியில் அமேசான் பிரைமில் வெளியிடுகின்றனர். இதைத்தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தியிலும் இந்த படத்தை டப் செய்து வெளியிடும் முயற்சியில் தயாரிப்பாளர்கள் இறங்க உள்ளார்களாம்.