துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் | த மெட்ராஸ் மிஸ்டரி : அது சாந்தனு அல்ல, யோஹன் சாக்கோ | மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் சித்தார்த் |
தமிழில் பூமி, ஈஸ்வரன் படங்களில் நடித்த நிதி அகர்வால் அதையடுத்து மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்தில் கமிட்டாகியுள்ளார். ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள இவர், தற்போது பவன் கல்யாண் நடிக்கும் ஹரிஹர வீரமல்லு என்ற சரித்திர படத்தில் நடித்து வருபவர், அதைத் தொடர்ந்து திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார். தற்போது மகேஷ்பாபு நடித்து வரும் சர்காரு வாரி பாட்டா படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இப்படத்தின் படப்படிப்பு தொடங்குகிறது. இந்த படத்தில் முதன்மை நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே, திஷா பதானி, ஜான்வி கபூர் என பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.