ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் த்ரிஷா மே 4-ந்தேதியான நேற்று தனது 38ஆவது பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடியிருக்கிறார். அவருக்கு அவரது சினிமா நண்பர்கள் பலரும் வாழ்த்து கூறினார்கள்.
இந்நிலையில் த்ரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ள நடிகை சார்மி, த்ரிஷாவின் திருமணம் குறித்தும் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில், த்ரிஷா பேச்சுலராக கொண்டாடும் கடைசி பிறந்தநாள் இதுவாகத்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் த்ரிஷா விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்பதை அவர் மறைமுகமாக இப்படி தெரிவித்துள்ளார். சார்மியின் இந்த கருத்துக்கு த்ரிஷா இதுவரை எந்த பதிலும் கொடுக்கவில்லை. த்ரிஷாவும், சார்மியும் நீண்டகால தோழிகள் என்பதோடு, பெளர்ணமி, கிங் போன்ற தெலுங்கு படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள்.