சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு |
தெலுங்குத் திரையுலகத்தில் நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பிஸியாக இருப்பவர் அடிவி சேஷ். கர்மா, கிஸ் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். க்ஷனம், கூடாச்சாரி, ஆகிய படங்களுக்கு கதை எழுதியிருக்கிறார். தற்போது மேஜர் என்ற படத்திற்கு கதை எழுதி நாயகனாக நடித்து வருகிறார்.
ஆந்திரா, தெலங்கானாவில் தற்போது கொரோனா பாதிப்புகளுக்கு அங்குள்ள தெலுங்கு திரைப் பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த சிறு சிறு உதவிகளைச் செய்து வருகிறார்கள். அந்த விதத்தில் கிங் கோட்டி மாவட்ட மருத்துவமனை பணியாளர்களுக்கும், நோயாளிகளுக்கும் குடிப்பதற்கு தண்ணீர் வசதி இல்லை என்ற செய்தி வெளிவந்தது.
அதைப் பற்றிப் படித்த அடிவி சேஷ் உடனடியாக 850 லிட்டர் தண்ணீர் பாட்டில்களை அந்த மருத்துவமனைக்கு தனது செலவில் அனுப்பி வைத்துள்ளார். மேலும், எவ்வளவு தேவையோ அதையும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். அந்த மருத்துவமனையில் சுமார் 300 கொரானோ நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்களாம்.
தமிழ்த் திரையுலகில் இன்னும் எந்த ஒரு பிரபலமும் தங்களால் இயன்ற உதவிகளை இந்த இரண்டாவது கொரானோ அலையில் ஆரம்பித்து வைக்கவில்லை.