ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா |

நடிகர் விவேக் சில தினங்களுக்கு முன்பு யாரும் எதிர்பாராத விதமாக மறைந்தார். அவரின் திடீர் மறைவு தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் அவரின் 1 கோடி மரக்கன்று நடும் பணியை இப்போதும் பலரும் முன்னெடுத்துள்ளனர். திரைப்பிரபலங்கள் உடன் பல்வேறு தன்னார்வலர்களும், பொதுமக்களும் அவர் நினைவாக மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விவேக் மறைவை யொட்டி அவர் நினைவாக அவரது வயதான 59ஐ குறிக்கும் வகையில் திருவள்ளூர் ஆயுத படை மைதானத்தில் மாவட்ட எஸ்பி அரவிந்தன் தலைமையில் 59 மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. இந்த நிகழ்வில் போலீசாருடன் இணைந்து நடிகை ரம்யா பாண்டியனும் மரக்கன்றுகளை நட்டார்.