ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா |

தமிழ் சினிமாவின் குணசித்ர மற்றும் காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கர். விஸ்காம் மாணவியான இவருக்கும், தொழிலதிபர் என்.ஏ.சுதாகர் மகன் அகுல் சுதாகருக்கும் இன்று (ஏப்ரல் 22) காலை சென்னை வானகரம் எம்.வெட்டிங் கான்வென்சன்ஸ் ஹாலில் திருமணம் நடந்தது.முன்னதாக நேற்று மாலை நடந்த மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
வாழ்த்தியவர்கள் விபரம் வருமாறு: நடிகர்கள் சரத்குமார், விஜய்சேதுபதி, விஜய் ஆண்டனி, டி.ராஜேந்தர், நாசர், ராதாரவி, அருண்விஜய், ஆனந்தராஜ், பிரசன்னா, பரத், மனோபாலா, இளவரசு, மயில்சாமி, ரமேஷ் கண்ணா, கருணாஸ், ஆர்.பாண்டியராஜன், சூரி, பூச்சி முருகன், வெற்றி, மாரிமுத்து, ராஜேஷ், போஸ் வெங்கட், வையாபுரி, சாம்ஸ், சென்ட்ராயன், நடிகைகள் சினேகா, தேவதர்ஷினி, குட்டிபத்மினி, சந்தியா, சாந்தினி, இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், வி.சேகர், சித்ரா லட்சுமணன், ஆர்.பாண்டிராஜ், மோகன்ராஜா, ஜெகன், பிரேம்குமார், தயாரிப்பாளர் எடிட்டர் மோகன், டி.சிவா, தனஞ்செயன், அழகன் தமிழ்மணி, இசையமைப்பாளர் தேவா, பாடகர் மனோ.
விழாவுக்கு வந்தவர்களை எம்.எஸ்.பாஸ்கர், அவரது மனைவி ஷீலா பாஸ்கர், என்.ஏ.சுதாகர், சீனா சுதாகர், ஆதித்யா பாஸ்கர், அக்சய் சுதாகர் ஆகியோர் வரவேற்றனர்.