டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை |

பாட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை ஐதராபாத்தில் இன்று(ஏப்., 22) திருமணம் செய்தார் நடிகர் விஷ்ணு விஷால்.
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் விஷ்ணு விஷால். இவர் தனது முதல் மனைவி ரஜினியை பிரிந்த பிறகு இந்திய பாட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து வந்தார். சமீபத்தில் காடன் பட ரிலீஸின்போது ஜுவாலாவை விரைவில் திருமணம் செய்ய போவதாக விஷ்ணு விஷால் அறிவித்தார். இரு வாரங்களுக்கு முன் ஏப்., 22ம் தேதியான இன்று இவர்கள் திருமணம் நடப்பதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் இது கொரோனா காலம் என்பதால் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஐதராபாத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்க இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. மணக்கோலத்தில் விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா இருக்கும் போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின. அதோடு திருமணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட சில போட்டோஷுட் படங்களும் வெளியாகி உள்ளன.