Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாதியிலேயே நிறுத்தப்பட்ட படம் ; தனுஷ் நாயகி வருத்தம்

22 ஏப், 2021 - 02:40 IST
எழுத்தின் அளவு:
Rajisha-vijayan-starring-kho-kho-movie-stalled

தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளவர் மலையாள நடிகை ரஜிஷா விஜயன். இவர் தற்போது இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கோ-கோவை மையப்படுத்தி மலையாளத்தில் உருவாகியுள்ள கோ-கோ என்கிற படத்தில் கதாநாயகியாக, கோகோ பயிற்சியாளராக நடித்துள்ளார். இந்தப்படமும் கடந்த ஏப்-14ல் ரிலீஸானது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என இரு தரப்பினரிடமும் பாராட்டு பெற்றது.

இந்தநிலையில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், தற்போது கேரளாவிலும் தியேட்டர்களில் படங்களை திரையிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். தனது படம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இப்படி பாதியில் நிறுத்தப்படுவது குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார் ரஜிஷா விஜயன்.


மேலும், “வேறு ஒரு தளம் மூலமாக உங்களை இந்தப்படம் வந்தடையும்” என்றும் கூறியுள்ள ரஜிஷா, இந்தப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பிருக்கிறது என்பதையும் சூசகமாக தெரிவித்துள்ளார்..


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஓடிடி.,யில் நேரடியாக ரிலீசாகும் சிவகார்த்திகேயனின் டாக்டர்ஓடிடி.,யில் நேரடியாக ரிலீசாகும் ... ஆக்சிஜன் சிலிண்டருக்காக அலைந்தேன் ; கன்னட நடிகர் சாதுகோகிலா வேதனை ஆக்சிஜன் சிலிண்டருக்காக அலைந்தேன் ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)