'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
இதற்குதானே ஆசைப்பட்டாய் உள்பட பல படங்களில் காமெடியனாக நடித்தவர் டேனியல் ஆனி போப். பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார்.
டேனியல் ஆனி போப் நள்ளிரவில் 17 வயது பள்ளி மாணவி ஒருவருடன் இன்ஸ்ட்ராகிராமில் தொடர்பு கொண்டு மன ரீதியான பாலியல் தொல்லை கொடுத்தாக தகவல்கள் இணையத்தில் பரவியது. மேலும் இதேப்போன்று பல பெண்களை குறிவைத்து அவர் நடக்க முயன்றார் என ஜாசன் சாமுவேல் என்ற நபர் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். மேலும் இளம் பெண்களுடன் அவர் சாட் செய்த ஸ்கிரீன்ஷாட், ஆடியோ, வீடியோ உள்ளிட்டவைகளையும் பதிவிட்டு வருகிறார். இது சமூகவலைளதங்களில் வைரல் ஆனது.
இதுகுறித்து பலரும் டேனியலை கடுமையாக விமர்சித்தனர். அவரை பற்றிய மீம்ஸ்களையும் வெளியிட்டனர். பாடகி சின்மயியும் இதுகுறித்து கருத்து வெளியிட்டிருந்தார். இது பரபரப்பை உண்டாக்கியது.
இதுகுறித்து தனது வழக்கறிஞர் மூலம் பதில் அளித்துள்ள டேனியல் "இது முற்றிலும் தவறான வதந்தி, என் மீது களங்கம் கற்பிக்க சிலர் செய்யும் முயற்சி. சம்பந்தபட்டவர்கள் எனக்கு எதிரான பதிவுகளை நீக்காவிட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருக்கிறார்.