ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
நடிகர் ராதாரவிக்கும்-பாடகி சின்மயிக்கும் நீண்டகாலமாகவே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அதாவது, வைரமுத்துவை மீடூ சர்ச்சையில் சின்மயி கொண்டு வதந்தபோது தொடங்கிய இந்த சர்ச்சை காரணமாக சின்மயியை டப்பிங் யூனியனில் இருந்து நீக்கினார் ராதாரவி. அதையடுத்து நீதிமன்றத்திற்கு சென்று அந்த பிரச்சினையில இருந்து மீண்டு வந்தார் சின்மயி.
இந்த நிலையில் தற்போது நயன்தாரா-உதயநிதி குறித்து ராதாரவி சர்ச்சையாக பேசியிருப்பதை அடுத்து அவருக்கு கண்டனம் தெரிவித்து ஒரு டுவீட் போட்டுள்ளார் சின்மயி. அந்த பதிவில், இந்த மனிதராலும், அவரது பேச்சாலும் நான் ரொம்பவே டயர்டு ஆகி விட்டேன். இதற்கு மேல் என்னால் முடியவில்லை. வெளிப்படையாகவே ஆபாசமாக பேசும் இவரை ஒரு கட்சி எப்படி நட்சத்திர பேச்சாளராக நியமித்துள்ளது என்பது எனக்கு தெரியவில்லை.
திமுகவின் ஆ.ராசாவாக இருக்கட்டும், ராதாரவியாக இருக்கட்டும் எல்லோருமே மோசமாகவே பேசி வருகிறார்கள். இவர்களுக்கு நாம் தான் வாக்களித்து அதிகாரத்தை கொடுத்து விட்டோம் என்று பதிவிட்டுள்ளார் சின்மயி.