'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், தனது தந்தையை போலவே தானும் நடிகராக மாறி, தற்போது மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட பாவ கதைகள் படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்தநிலையில் தற்போது மலையாளத்தில் காளிதாஸ் நடிக்கும் படம் ஒன்றில் அவரது அம்மாவாக நடிக்கிறார் மலையாள நடிகை லட்சுமி கோபால்சாமி. தமிழில் பீமா படத்தில் பிரகாஷ்ராஜ் ஜோடியாக நடித்தவர் இவர் தான்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் காளிதாஸ் 2000-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய 'கொச்சு கொச்சு சந்தோஷங்கள்' என்கிற படத்தில் அவரது அம்மாவாக நடித்திருந்தார் லட்சுமி கோபால்சாமி. அதன்பிறகு 21 வருடங்கள் கழித்து மீண்டும் அவருடன் இணைந்து நடிப்பதுடன் காளிதாஸுக்கு அம்மாவாகவே நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.