'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி |

அஜித் நடிப்பில் வினோத் டைரக்சனில் உருவான நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த, பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர், தற்போது அதே கூட்டணியை வைத்து 'வலிமை' படத்தை தயாரித்து வருகிறார். ஆனால் இவர் அஜித் படங்களின் அப்டேட்டுகளை சரியாக தருவதில்லை என அஜித் ரசிகர்களின் விமர்சனத்திற்கும் ஆளானார். அதனால் கிரிக்கெட் போட்டியின்போது ஸ்டேடியத்திலும், பிரதமர் வருகையின்போது நடைபெற்ற பேரணியிலும் வலிமை அப்டேட் கேட்கும் அளவுக்கு அஜித் ரசிகர்கள் சென்றார்கள். அதன்பின் அஜித் அறிக்கை விட்டு ரசிகர்களை சமாதாப்படுத்தினார். அதோடு மே 1 முதல் வலிமை அப்டேட் வரும் தயாரிப்பாளர் தெரிவித்து இருந்தார்.
நிலைமை இப்படி இருக்க போனி கபூரோ அஜித்தின் அடுத்த படத்தையும் தயாரிப்பதற்கு தயாராக உள்ளதாக சூசகமான தகவல் ஒன்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தி உள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “எங்கள் இருவருக்குமே நல்ல பிணைப்பு இருக்கிறது. அவருடனான இந்த நட்பை அவர் விரும்பும் வரை தொடர விரும்புகிறேன்.. அவரும் அதையே தான் விரும்புகிறார் என்றும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்” என கூறியுள்ளார்.
ஏற்கனவே ஹெச்.வினோத் டைரக்சனில் அஜித் நேரடியாகவே வலிமை படத்தில் நடிக்க இருந்தார்.. ஆனால் போனி கபூரோ விவரமாக, பிங்க் படத்தின் ரீமேக்கை முதலில் கொண்டு வந்து அஜித் - வினோத் கூட்டணியை சம்மதிக்க வைத்தார். அடுத்ததாக வினோத்தின் ஒரிஜினல் கதையை தற்போது படமாக்கி வருகிறார். அந்தவகையில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த போனி கபூர், மூன்றாவதும் ஒரு படத்தை எடுக்க தயாராக இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.