இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? |
மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 65ஆவது படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் ரஷ்யாவில் நடைபெற உள்ளது. மேலும், இப்படத்தில் பூஜா ஹெக்டேதான் நாயகியாக நடிக்கிறார் என்கிற செய்திகள் ஏற்கனவே வெளியாகி வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்புதான் அந்த செய்தியை தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியது.
இந்த நேரத்தில், விஜய் 65ஆவது படத்தில் இன்னொரு நாயகியும் இருப்பதாக புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புதிய நாயகி ராஷ்மிகா மந்தனாவாக இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் விஜய் சேதுபதியின் கருப்பன் உள்பட சில படங்களில் நடித்துள்ள தன்யா ரவிச்சந்திரனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.