சகலகலா வல்லவன் ‛ஹேப்பி நியூர்' பாடலை படமாக்கிய ஒளிப்பதிவாளர் பாபு காலமானார் | டிச., 25ல் சிறை ரிலீஸ் : உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட விக்ரம் பிரபு படம் | இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் |
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெயரைக் கெடுத்துக் கொண்டவர்களும் உண்டு, மக்கள் மத்தியில் பிரபலமானவர்களும் உண்டு. ஆனால் கடந்த சீசனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்ற நடிகர் ஆரி அளவிற்கு இதற்கு முன்னர் தமிழ் பிக் பாஸில் யாரும் மக்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெறவில்லை.
டைட்டிலை வென்ற கையோடு தனது பட வேலைகளிலும், சமூகசேவையிலும் பிஸியாகி விட்டார் ஆரி. அலேகா', 'பகவான்' மற்றும் 'எல்லாமே மேல இருக்குறவன் பாத்துக்குவான்' என ஆரி நாயகனாக நடித்து வரும் மூன்று படங்களின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இவை தவிர சமீபத்தில் இன்னொரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ஆரி. இயக்குனர் ஏஆர் முருகதாஸ் உதவியாளர் ஹரிஹரன் இயக்கும் இப்படத்தில் ஆரி போலீசாக நடிக்கிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆரி வெளியிட்டுள்ள பதிவில், 'விரைவில் ஒரு மாஸ் அறிவிப்பை வெளியிட உள்ளதாக' தெரிவித்துள்ளார். அனேகமாக இந்த அறிவிப்பு ஆரி நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே ஆரியின் அந்த மாஸ் அறிவிப்பிற்காக அவரது ஆர்மியினர் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.