நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
சிவா இயக்கத்தில் இமான் இசையமைப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'அண்ணாத்த'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் ஆரம்பமான படப்பிடிப்பின் போது படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று பரவியதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் சென்னையில் மட்டுமே படப்பிடிப்பை வைத்துக் கொள்ள ரஜினிகாந்த் தரப்பிலிருந்து கேட்கப்பட்டதாம். அதையடுத்து மீண்டும் கடந்த வாரத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
தற்போது சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் ரஜினிகாந்த், நயன்தாரா பங்கேற்கும் டூயட் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பை தொடர்ச்சியாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள்.