துல்கர் சல்மானுக்கு முதல் ரூ.100 கோடி வசூலை தந்த லக்கி பாஸ்கர் | தமிழில் அடுத்த 'உண்மையான பான் இந்தியா' எப்போது? | மாதுரி தீட்சித் உடன் நடனமாடியது பெருமை - வித்யாபாலன் | 'கங்குவா' போல சில கதைகள் உள்ளன: இயக்குனர் சிவா ஆர்வம் | சினிமா எடிட்டர் உதய சங்கர் காலமானார் | ''குற்ற உணர்வால் எடுத்த முடிவு.. 10 ஆண்டுகளே நடிப்பேன்'': அமீர்கான் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி | 'புஷ்பா 2' பாடலுக்காக ஸ்ரீ லீலா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? | என்னை நம்பி கடவுள் ஒரு குழந்தையை ஒப்படைத்திருக்கிறார் : மகன் பற்றி பிரியாராமன் கண்ணீர் பேட்டி | 'ஏ' சான்றிதழ் படத்தில் 4 ஹீரோயின்கள் | எரிந்து போன முதல் படம், நடன நடிகை, தமிழ் நாட்டின் முதல்வர்: வி.என்.ஜானகி நூற்றாண்டு |
மூச்சுதிணறல் காரணமாக நடிகர் கார்த்திக் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழில் முன்னணி நாயகனாக வலம் வந்த கார்த்திக், அரசியல் என பாதை மாறியதால் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கினார். நீண்ட இடைவெளிக்கு பின் படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது, ‛தீ இவன்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் மனித உரிமை காக்கும் கட்சி என்ற அமைப்பை நடத்தி வருகிறார். நடைபெறும் சட்டசபை தேர்தலில் அதிமுக ., - பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததோடு, அவர்களுக்காக பிரச்சாரம் செய்ய போவதாகவும் அறிவித்தார். கட்சி தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் ‛நெகட்டிவ்' என ரிசல்ட் வந்துள்ளது.