மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' | 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இதயத்தை திருட வரும் நடிகை | பிளாஷ்பேக் : மருதகாசியை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய திருச்சி லோகநாதன் குரல் | பிளாஷ்பேக் : சிறை வாழ்க்கையையும் காமெடியாக்கிய என்.எஸ்.கிருஷ்ணன் | நான்காவது வாரத்தை கடந்து நான்-ஸ்டாப் ஆக ஓடும் 'அமரன்' |
தமிழ்த் திரையுலகம் ஒரு பெரும் போராட்டத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அது பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் சினிமா உலகத்தில் உள்ள சங்கங்கள் கண்டும் காணாமல் இருக்கின்றன.
கொரோனா பாதிப்புகளுக்குப் பிறகு நவம்பர் மாதம் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'மாஸ்டர்' படத்திற்குத்தான் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வந்தார்கள். அந்தப் படம் தியேட்டர்களை விட்டு போனதும் மீண்டும் தியேட்டர்கள் காற்றாட ஆரம்பித்துவிட்டன.
நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் சில படங்கள் வெளிவந்தன. ஆனால், அந்தப் படங்களைப் பார்க்கக் கூட யாருமே வரவில்லை என்பதுதான் சோகத்திலும் சோகம். சென்னையில் உள்ள சில தியேட்டர்கள் பக்கம் நேற்று சென்று வந்த போது அதை நேரில் பார்க்க முடிந்தது.
பகல் காட்சிகளுக்குக் கூட மக்கள் வராமல் தியேட்டர்கள் வெறிச்சோடிக் கிடந்தன. இந்த நிலை தேர்தல் வரை இப்படியேதான் இருக்கும் என சில தியேட்டர்களில் சொல்கிறார்கள்.
தேர்தலுக்குப் பிறகு சில முன்னணி நடிகர்களின் படங்கள் வருகின்றன. அப்போது மக்கள் மீண்டும் வருவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அதே சமயம் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் மக்கள் இன்னும் சில மாதங்களுக்கு தியேட்டர்களை நோக்கி வருவது சந்தேகம்தான் என்றும் சிலர் கவலைப்படுகிறார்கள்.
திரையுலகில் உள்ள முக்கிய சங்கங்கள் ஒன்று கூட கலந்து பேசி பல சலுகைகளை அறிவித்து மக்களை மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வரவைக்க வேண்டும் என சினிமா நலம்விரும்பிகளின் கருத்தாக உள்ளது.