மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு பொங்கல் முதல் தியேட்டர்கள் பழைய இயல்பு நிலைக்குத் திரும்பியதாக தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அதற்குக் காரணமாக 'மாஸ்டர்' படம் இருந்தது.
அதற்குப் பிறகு வெளிவந்த படங்கள் வியாபார ரீதியாக வசூலைப் பெற முடியாமல் தவித்து வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் “பாரிஸ் ஜெயராஜ், குட்டி ஸ்டோரி, நானும் சிங்கிள்தான், கேர் ஆப் காதல், இது விபத்து பகுதி' ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன.
இவற்றில் 'பாரிஸ் ஜெயராஜ், குட்டி ஸ்டோரி' ஆகிய படங்களுக்கு மட்டும் மிகக் குறைவான ரசிகர்கள் இன்று காலை காட்சிக்கு வந்திருக்கிறார்கள். மற்ற படங்களுக்கு ரசிகர்கள் வராத காரணத்தால் பல ஊர்களில் காலைக் காட்சிகளை ரத்து செய்திருக்கிறார்கள். மதியக் காட்சிகளுக்கும் இதே நிலைமைதான்.
பெரிய நடிகர்களின் படங்களை மட்டும் தியேட்டர்களில் போய்ப் பார்க்கலாம் என ரசிகர்கள் நினைக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. சில படங்களைப் பார்க்க மக்கள் ஆர்வம் காட்டுவதேயில்லை. அப்படிப்பட்ட படங்களை தியேட்டர்களில் வெளியிடுவதை விட ஓடிடி தளத்தில் வெளியிட்டாலாவது மக்கள் பார்ப்பார்கள்.
கொரோனா தாக்கம் தமிழ் சினிமாவை நிறையவே மாற்றிவிட்டது. இனி, சிறிய பட்ஜெட் படங்களுக்கு மக்கள் வரவேற்பு கிடைக்குமா என்பதே சந்தேகம்தான்.