'காடன், எப்ஐஆர்' படங்களில் நடித்து முடித்து விட்ட விஷ்ணு விஷால், அடுத்து 'மோகன் தாஸ்' என்ற படத்தில் ஹீரோவாக நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார். உண்மை கதையை மையமாக வைத்து தயாராகும் இதை முரளி கார்த்திக் இயக்குகிறார். இந்தப்படத்தில் இப்போது நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பை துவங்குகிறார்கள்.