தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படம் குறித்த அப்டேட் கடந்த சில மாதங்களாகவே அஜித்தின் ரசிகர்கள் கேட்டுக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இம்மாதம் இறுதியில் வலிமை அப்டேட் கண்டிப்பாக வெளியாகும் என்று தன்னை ஸ்பாட்டில் சந்தித்த ரசிகர் ஒருவரிடத்தில் கூறியிருந்தார் அஜித். அதையடுத்து வலிமை படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துள்ள சங்கீதா என்ற நடிகையும் பிப்ரவரியில் கட்டாயமாக வலிமை அப்டேட் வரப்போகிறது என தெரிவித்தார்.
இப்படியான நிலையில் இன்றைய தினம் தனது வெப்சைட்டை அறிமுகம் செய்துள்ள இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, அதில் முதன்முதலாக வலிமை அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதாவது வலிமை படத்தில் அஜித்தின் முதல் ஓப்பனிங் பாட்டை விக்னேஷ் சிவன் எழுதியிருப்பதாகவும், இந்த பாடலுக்காக ஒரிசாவிலிருந்து ட்ரம்ஸ் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு தான் பாடலுக்கு இசையமைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் அஜித்துடன் யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ள இந்த எட்டாவது படத்தின் இந்த அப்டேட் அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் தகவலாக அமைந்துள்ளது. தொடர்ந்து வலிமை அப்டேட் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகும் என்று தெரிகிறது.