பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
சாஹோ படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் படம் சலார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயின். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியிடுகிறார்கள். இதன் படப்பிடிப்புகள் பெங்களூரை அடுத்த கோலார் தங்கவயலில் நடத்த திட்டமிட்டனர். அதற்கு கர்நாடக அரசு பாதுகாப்பு கருதி அனுமதி அளிக்கவில்லை.
இதனால் படப்பிடிப்பை தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோதாவரிகணியில் உள்ள நிலக்கரி சுரங்கத்திலும், அதை சுற்றியுள்ள காடுகளிலும் படப்பிடிப்பபை நடத்தி வருகிறார்கள். இந்த பகுதி நக்சலைட்டுகள் அதிகம் உள்ள பகுதியாகும். நக்சலைட்டுகள் அச்சுறுத்தலால் இங்கு இதுவரை எந்த படத்தின் படப்பிடிப்பும் நடந்ததில்லை.
தற்போது சலார் படத்தின் படப்பிடிப்புக்கு நக்சலைட்டுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தெலுங்கானா காடுகளை வணிக நோக்கத்திற்காக எடுக்கப்படும் சினிமாவுக்கு பயன்படுத்த அனுமதிக் க மாட்டோம். வெளியேறுங்கள் என நக்சலைட்டுகள் படத் தயாரிப்பு தரப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதை தொடர்ந்து பிரபாஸ் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் ராமகுண்டம் நகர போலீஸ் கமிஷனரை சந்தித்து போலீஸ் பாதுகாப்பு கேட்டனர். இதையடுத்து படப்பிடிப்பில் 40 ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.