பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
சாதனைகள் படைக்கப்படுவதே அதை முறியடிப்பதற்குத்தான் என்று சொல்வார்கள். அப்படி ஒரு பிரம்மாண்டமான சாதனையை 'கேஜிஎப் சேப்டர் 2' டீசர் வெளியான 24 மணி நேரத்தில் படைத்துள்ளது.
நேற்று முன்தினம் இப்படத்தின் டீசர் யு டியூபில் வெளியானது. வெளியானதிலிருந்தே தொடர்ந்து பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. நேற்று இரவுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 78 மில்லியன் பார்வைகள், 4.2 மில்லியன் லைக்குகளைப் பெற்று புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.
இந்தியத் திரையுலகில் வேறு எந்த ஒரு டீசரும் 24 மணி நேரத்தில் இந்த அளவிற்கு வரவேற்பைப் பெற்றதில்லை. தற்போது வரை 8 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும், 4.7 மில்லியன் லைக்குகளையும் இந்த டீசர் பெற்றுள்ளது.
டீசரைப் பொறுத்தவரை 'கேஜிஎப் 2' டீசர்தான் இதற்கு முன்பு வெளியான அனைத்து டீசர்களைக் காட்டிலும் தற்போது முதலிடத்தில் உள்ளது. இந்த சாதனையை வேறு எந்தத் திரைப்படத்தின் டீசர் முறியடிக்கும் என்பதும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
தென்னிந்தியத் திரைப்படங்களைப் பொறுத்தவரையில் தமிழ்ப் படங்களின் டீசர், டிரைலர்கள்தான் இப்படியான சாதனைகளை ஆரம்பித்து வைத்தது. அதன்பின் 'பாகுபலி' டிரைலர் முந்தைய சாதனைகளை முறியடித்து முதலிடத்தில் உள்ளது. அந்த டிரைலர் 117 மில்லியன் பார்வைகளை தன் வசம் வைத்துள்ளது. அந்த சாதனையை 'கேஜிஎப் 2' டீசர் முறியடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அந்த சாதனையையும் முறியடித்து, டீசர், டிரைலர்களில் முதலிடத்தை 'கேஜிஎப் 2' டீசர் பிடித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி ஒரு சாதனை நிகழ்ந்தால், அதை முறியடிக்க ராஜமௌலி இயக்கி வரும் 'ஆர்ஆர்ஆர்' டீசரால் மட்டுமே முடியும் என டோலிவுட் ரசிகர்கள் சொல்கிறார்கள்.
'கேஜிஎப் 2' பாணியில் 5 மொழிகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு டீசரை மட்டும் 'ஆர்ஆர்ஆர்' குழுவினர் வெளியிட்டால் அது சாத்தியம்தான்.
தமிழ்ப் படங்கள் என்று பார்த்தால் வரும் மாதங்களில் 'வலிமை, அண்ணாத்த' ஆகிய படங்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு இருக்கிறது. விஜய் 65 இன்னும் ஆரம்பிக்கவேயில்லை. எனவே, இன்னும் கொஞ்ச நாளைக்கு விஜய், அஜித் ரசிகர்கள் அவர்களது டீசர், டிரைலர், லைக்குகள் சாதனையைப் பற்றிப் பேச முடியாது.