பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

அஜித் நடித்த மங்கத்தா படம் இன்று ரீ ரிலீஸ் ஆகி உள்ளது. அதேபோல், அஜித் மச்சான், அதாவது, அவர் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் நடித்த திரவுபதி 2 படமும் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. மாமனும், மச்சானும் மோதுகிறார்களே? இதை எப்படி பார்க்கிறீர்கள் என்று திரவுபதி 2 இயக்குனரிடம் கேட்டால், ''நாங்கள் யாருமே இந்த ரிலீசை எதிர்பார்க்கவில்லை. பொங்கலுக்கு வருவதாக இருந்த திரவுபதி2 படம், இந்த வாரம் வருகிறது. மங்கத்தா ரீ ரிலீசை முன்பே அறிவித்துவிட்டார்கள். திரவுபதி ரிலீஸ் ஆகாவிட்டால், நானே மங்கத்தா போய் பார்ப்பேன். அஜித்துக்கு தனி மார்க்கெட், தனி ரசிகர்கள் கூட்டம். இந்த இரண்டு படத்தையும் போட்டி போடக்கூடாது என்கிறார்.
அவரிடம் பாஜ தலைவர்கள் பலர் திரவுபதி 2 படம் பார்த்த நிலையில், மற்ற கட்சி தலைவர்கள், உங்களை விமர்சனம் செய்பவர்களுக்கும் படத்தை போட்டு காண்பிப்பீர்களா என்று கேட்டதற்கு பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா, நடிகை கஸ்துாரி, நடிகர் ரஞ்சித் உட்பட பலர் படத்தை பார்த்துள்ளனர். பாமக தலைவர்களும் பார்த்துள்ளனர். நாம் தமிழர் சீமான் மற்றும் நீங்கள் குறிப்பிடும் அனைவருக்கும், இயக்குனர்களுக்கும் படத்தை போட்டு காண்பிக்க ரெடி. ஆனால், அவர்கள் வர வேண்டுமே? படம் பார்க்க நேரம் ஒதுக்கினால் அவர்களுக்கு போட்டு காட்ட ரெடி. அவர்களை அழைத்து வர ரெடியா என்றார். மேலும், 300க்கும் அதிகமான தியேட்டர்களில் திரவுபதி 2 வருகிறது என்றும் மோகன்.ஜி. கூறினார்.
இதற்கிடையில் படம் வெற்றி பெற வேண்டி, ஹீரோ ரிச்சர்ட் திருச்செந்துார் சென்று வந்துள்ளார்.




