ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

2025ம் ஆண்டின் கடைசி கட்டத்திற்கு வந்துவிட்டோம். கடந்த வாரம் நவம்பர் 7ம் தேதியுடன் 230 படங்கள் வெளியாகி உள்ளன. கடந்த வாரம் வெளியான படங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை. அவற்றில் சில படங்கள் நன்றாகவே இருந்தாலும் அப்படங்கள் மக்களைச் சென்றடையம் வேலையை படக்குழுவினர் பார்க்கவில்லை.
இந்த வாரம் நவம்பர் 14ம் தேதி மூன்று படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் பலர் நடிக்க 'காந்தா' படம் அந்தக் கால சினிமா சண்டை பின்னணியில் உருவான படமாக வருகிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார்.
பிரபு சாலமன் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் புதுமுக நடிகர் மதி நாயகனாக நடிக்க, அர்ஜுன் தாஸ், ஷ்ரிதா ராவ் மற்றும் பலர் நடிக்கும் 'கும்கி 2' படம் வெளியாகிறது. 2012ல் வெளிவந்த 'கும்கி' பெரிய வெற்றிப் படமாக இருந்தது. இந்தப் படத்திற்கு எப்படி வரவேற்பு கிடைக்கப் போகிறது என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.
முகுந்தன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில் ஆனந்தராஜ், சம்யுக்தா, முனிஷ்காந்த் மற்றும் பலர் நடித்துள்ள 'மதறாஸ் மாபியா கம்பெனி' படமும் இந்த வாரம் வெளியாகிறது. இவற்றோடு ரிரிலீஸ் படமான 'ஆட்டோகிராப்' படமும் வருகிறது.
இந்த வாரம் அதிகப் போட்டியில்லை. ஆனால், அடுத்த வாரம் நவம்பர் 21ம் தேதி ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




